பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும்; நயினார் நாகேந்திரன்

9 புரட்டாசி 2025 செவ்வாய் 14:44 | பார்வைகள் : 566
பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி;
இந்த திமுக அரசு போராடுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் நசுக்கிற அரசாக உள்ளது. தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் கொஞ்சமாகவாக நடக்கிறது, ஆளும்கட்சி தரப்பில் எல்லாம் மிரட்டல்கள் நடந்து கொண்டு தான் இருந்திருக்கிறது.
துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார். செங்கோட்டையன் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கிறாரா என்பது பற்றி எனக்கு எந்த தகவல் வரவில்லை.
அதிமுக பொதுச் செயலாளர் ஒரு முடிவை எடுத்துள்ளார். அவரை (செங்கோட்டையனை) நீக்கி உத்தரவிட்டுள்ளார். எங்களை பொறுத்த வரை, அதிமுகவில் இருந்து நீக்கியவர்களை நாங்கள் உடனடியாக சென்று சந்திக்க முடியாது. 11ம் தேதி கண்டிப்பாக நான் டில்லி செல்கிறேன். செங்கோட்டையன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து ஏற்கனவே வெள்ளை அறிக்கை கேட்டு இருந்தோம். ஆனால் அவர் பதிவு மட்டுமே போட்டுக் கொண்டு இருக்கிறார்.
பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று நான் ஏற்கனவே பேசி இருக்கிறேன். தேவைப்பட்டால் நானே அவர்களிடம் நேரிடையாக சென்று பேசுவேன் என்று சொல்லி இருக்கிறேன். அவர்கள் அழைத்தால் நானே போய் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன் என்று நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். தேவைப்பட்டால் நானே போய் அழைப்புக் கொடுப்பேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1