உண்மையான அன்பின் அடித்தளம்.. எது தெரியுமா?

8 புரட்டாசி 2025 திங்கள் 18:13 | பார்வைகள் : 746
நமது வாழ்க்கையில் எதிர்பாராத சமயத்தில் சிலரை சந்திக்கும் போது, அவர் யாரென்றே தெரியாத நிலையிலும் கூட மின்னல் தாக்கியது போன்ற ஈர்ப்பு அவரிடம் ஏற்படும். பெரும்பாலும் இது உடல் ரீதியான ஈர்ப்பாகவே இருக்கும். அதேசமயம் ஆழமான உறவுகளும் இருக்கிறது. இது எந்த ஆரவாரமும் இல்லாமல் நிலைத்திருக்கும். அப்படியென்றால் காலப்போக்கில் சிலர் நெருக்கமாக மாறுவதற்கும் மற்றவர்கள் நினைவில் பிந்தங்கி போவதற்கும் எது காரணமாக இருக்கும்? எந்த வகையான உறவு நிலைத்திருக்கும்?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், உடல் ரீதியான ஈர்ப்பு சக்தி வாய்ந்தது. எல்லாம் தொடங்குவது இந்த தீப்பொறியில் தான். இது மனித இயல்பு. ஆனால் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஈர்ப்பு என்பது, உங்கள் காதல் கதையை மணலில் எழுதுவதற்கு சமமானது. ஏனென்றால் காலம், பரிச்சயம் மற்றும் கண்ணோட்டத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட இந்த உறவை இல்லாமல் ஆக்கிவிடும். இன்று உங்களை பிரமிக்க வைப்பது நாளை சாதாரணமாகிவிடும். இதுதான் யதார்த்தம்.
ஒரு காலத்தில் கவர்ச்சிகரமானதாகத் தோன்றிய ஒன்று, காலப்போக்கில் வெறுமையாக உணரத் தொடங்கும். ஏனென்றால் ஈர்ப்பு முற்றிலும் உடல் ரீதியானதாக இருக்கும்போது, அது எப்போதும் புதுமையைக் கோருகிறது. ஆனால் எதுவுமே என்றென்றும் புதியதாக இருக்காது என்பதுதன் உண்மை.
ஏனென்றால் இதில் யாராலும் போலியாக நடிக்க முடியாது. குழப்பமான சூழலில் கூட, இதுபோன்ற நபர்களின் இருப்பு உங்களை நிம்மதியாக உணர வைக்கும். நீங்கள் அவருடன் மௌனமாக அமர்ந்திருந்தாலும் கூட, உங்களுக்குள் சிறந்த உரையாடல் இருப்பது போல் உணர வைக்கும். இந்த வகையான இணைப்பு என்றும் மங்காது. நாளாக நாளாக ஆழமடைகிறது. உடல் ரீதியான ஈர்ப்பு தோற்றத்தைப் பொறுத்தது என்றாலும்,ஒருவர் மீதான உணர்ச்சி சார்ந்த ஈர்ப்பு மிகவும் வலுவான ஒன்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது
அவர்களின் மன இயல்பு, மதிப்பீடுகள், வாழ்க்கை கடினமாகும்போது எதிர்வினையாற்றும் விதம், யாரும் பார்க்காதபோது அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள், எப்படி உங்களை உணர வைக்கிறார்கள் என்பதுதான் இங்கு முக்கியம். மற்ற அனைத்தும் மாறினாலும், இது அவர்களிடம் நிலைத்திருக்கும். ஆழமான பிணைப்புள்ள உறவுகளில் உள்ளவர்கள், தங்கள் துணை முதலில் சந்தித்ததை விட இப்போது இன்னும் அழகாக இருப்பதாக அடிக்கடி கூறுவதற்கு இதுவே காரணம்.
உடல் ரீதியான ஈர்ப்பு என்பது தீப்பொறி போன்றது. ஆனால் உணர்ச்சி சார்ந்த ஈர்ப்பு தொடர்ந்து எரியும் நெருப்பு. நீங்கள் எப்போதாவது ஒருவருடன் இருந்திருந்தால், அழகைத் துரத்தவும், காதல் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்றும் இந்த உலகம் நம்மை நம்ப வைக்கிறது. ஆனால் காலம் முழுவதும் நீடிக்கும் உறவுகள் அட்ரினலின் மீது கட்டமைக்கப்பட்டவை அல்ல..
ஆகவே ஒருவரின் கவர்ச்சியான தோற்றம் உங்கள் கண்களைக் கவரும். ஆனால் அதில் ஆழம் இருக்காது. ஆழமான உறவு உங்கள் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். காலத்தின் சோதனையைத் தாங்கும் ஒரே வகையான ஈர்ப்பு இதுதான்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1