342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி! அனைத்து அணிகளையும் ஓரங்கட்டி இமாலய சாதனை
8 புரட்டாசி 2025 திங்கள் 11:09 | பார்வைகள் : 1406
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
சௌதாம்டானில் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 414 ஓட்டங்கள் குவித்தது. ஜேக்கப் பெத்தேல் 82 பந்துகளில் 110 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 13 பவுண்டரிகள்) விளாசினார்.
ஜோ ரூட் (Joe Root) 96 பந்துகளில் 100 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் (Jos Buttler) 32 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20.5 ஓவரில் 72 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக போஷ் (Bosch) 20 ஓட்டங்கள் எடுத்தார்.
இங்கிலாந்தின் ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளும், அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளும், பிரைடோன் கார்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்தது.
இதற்கு முன் 2023யில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள்
இங்கிலாந்து - 342 ஓட்டங்கள்
இந்தியா - 317 ஓட்டங்கள்
அவுஸ்திரேலியா - 309 ஓட்டங்கள்
ஜிம்பாப்வே - 304 ஓட்டங்கள்
இந்தியா - 302 ஓட்டங்கள்
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan