இயக்குனர் அவதாரம் எடுத்த அசுரன் பட நடிகர் கென் கருணாஸ்!

7 புரட்டாசி 2025 ஞாயிறு 13:03 | பார்வைகள் : 585
2019 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில், தனுஷின் இளைய மகனாக நடித்த கென் கருணாஸ், தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். பின்னர் ‘வாத்தி’ மற்றும் ‘விடுதலை’ படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
தற்போது அவர் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்கும் படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இது ஒரு பள்ளிக் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் மலையாள முன்னணி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், ஸ்ரீதேவி அப்பல்லா மற்றும் அனிஷ்மா உள்ளிட்ட மூன்று நடிகைகள் கதாநாயகிகளாக உள்ளனர். இப்படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் கவனிக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1