2 புதிய Polo எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் Volkswagen

6 புரட்டாசி 2025 சனி 12:16 | பார்வைகள் : 647
ஜேர்மனியின் பிரபல கார் நிறுவனமான Volkswagen, தனது புகழ்பெற்ற ஹாட்ச்பேக் மொடலான Polo-வை முழுமையாக மின்சார காராக மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த புதிய மொடல்கள் ID.Polo மற்றும் ID.Polo GTI என அழைக்கப்படுகின்றன.
இவை MEB Entry எனப்படும் மின்சார வாகன தளத்தில் உருவாக்கப்படுகின்றன.
இந்த தளம் 450 கி.மீ. வரை ஒட்டக்கூடிய இரண்டு பேட்டரி விருப்பங்களை வழங்கும்.
ID.Polo GTI மொடல், ஃபோக்ஸ்வேகனின் முதல் மின்சார hot hatch ஆகும். இது 220bhp-க்கும் மேற்பட்ட சக்தியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு மொடல்களும் Front Wheel Drive அமைப்பில் ஒரே மின்சார மோட்டாருடன் வரவிருக்கின்றன.
இந்த காரின் விலை 25,000 யூரோவாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய ID.Polo மொடல்கள், ஃபோக்ஸ்வேகனின் மின்சார பிரிவில் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகின்றன.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1