ரோஹித் ஷர்மாவின் சிக்ஸர் சாதனையை முறியடித்த UAE அணித்தலைவர் முகமது வசீம்
3 புரட்டாசி 2025 புதன் 11:45 | பார்வைகள் : 2065
T20 கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் சாதனை ஒன்றை UAE அணித்தலைவர் முகமது வசீம் முறியடித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் விளையாடும் முத்தரப்பு T20 தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்றைய போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதியது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ஓட்டங்கள் எடுத்தது.
189 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் அதிபட்சமாக அந்த அணியின் அணித்தலைவர் முகமது வசீம், 37 பந்துகளில், 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 67 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
இதில், 6 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், T20 கிரிக்கெட் வரலாற்றில் முகமது வசீம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இதன் மூலம், T20 கிரிக்கெட்டில் 110 சிக்ஸர்கள் அடித்து ஒரு அணித்தலைவராக அதிக சிக்ஸர்கள் அடித்த பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் ரோஹித் சர்மா, 105 சிக்ஸர்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். முகமது வசீம் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இங்கிலாந்தின் இயோன் மோர்கன் 86 சிக்ஸர்களுடன் 3வது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஆரோன் ஃபின்ச் 4வது இடத்திலும், ஜப்பானின் கடோவாக்கி ஃப்ளெமிங் 79 சிக்ஸர்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan