40 பந்துகளில் அதிரடி சதம் - CPL தொடரில் பல சாதனைகளை படைத்த டிம் சீஃபர்ட்
2 புரட்டாசி 2025 செவ்வாய் 08:09 | பார்வைகள் : 642
தனது அதிரடி சதத்தின் மூலம், CPL தொடரில் பல சாதனைகளை படைத்துள்ளார் நியூஸிலாந்து வீரர் டிம் சீஃபர்ட்.
மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியம் லீக்(CPL) T20 தொடரின், நேற்றைய போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ்(SLK) மற்றும் ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸ்(ABF) அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற SLK அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய ABF அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்கள் குவித்தது.
தொடர்ந்து 205 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய SLK அணி, 17.5 ஓவர்களில் 206 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதில் SLK அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிம் சீஃபர்ட்(Tim Seifert), அதிரடியாக விளையாடி, 53 பந்துகளில் 125 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் மூலம், டிம் சீஃபர்ட் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
40 பந்துகளில் சதமடித்த டிம் சீஃபர்ட், CPL தொடரின் அதிவேக சதம் என்ற ஆண்ட்ரே ரஸ்ஸலின் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும், இதன் மூலம் CPL தொடரில் அதிகபட்ச ஓட்டம் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
முன்னதாக தென் ஆப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ், ஒரு போட்டியில் 60 பந்துகளில் 120 ஓட்டங்கள் எடுத்ததே அதிபட்சமாக இருந்தது.
மேலும், இது CPL தொடரின் 2வது தனிநபர் அதிகபட்ச ஓட்டம் ஆகும்.
2019 CPL தொடரில், பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மேற்கிந்திய தீவுகளின் பிராண்டன் கிங் 132 ஓட்டங்கள் எடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan