பழைய சோற்றில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா ?
31 ஆவணி 2025 ஞாயிறு 17:10 | பார்வைகள் : 2569
பழங்காலத்திலிருந்தே தமிழர்களின் உணவில் முக்கிய இடம்பிடித்த, 'பழைய சோறு', உழைக்கும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாகும். தற்போது, இது உடல்நலத்திற்கு தரும் நன்மைகளால், பலராலும் தேடி உண்ணப்படும் உணவாக மாறியுள்ளது. நம் முன்னோர்கள் இதனை 'அமுதம்' என்று போற்றியதற்கு பல காரணங்கள் உள்ளன.
பழைய சோற்றில் உள்ள நொதிகள் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இது குடல் இயக்கங்களை சீராக்கி, மலச்சிக்கல் மற்றும் அஜீரணக் கோளாறுகளை தடுக்கிறது.
இதில், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், அரிதாக கிடைக்கும் வைட்டமின் பி6 மற்றும் பி12 ஆகியவையும் உள்ளன.
உடனடி ஆற்றல்: பழைய சோற்றில் உள்ள நொதிகளும், ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுத்து, புத்துணர்ச்சி பெற உதவுகின்றன.
இதன் புளிப்பு சுவைக்குக் காரணம், அதில் உருவாகும் லாக்டிக் அமில பாக்டீரியா ஆகும்.பழைய சோற்றை தயிர், உப்பு, சீரகம், சாம்பார் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவது அதன் சுவையையும், சத்துக்களையும் அதிகரிக்கும். இதன் மூலம் சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவாக இது அமைகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan