தோனி என்னை கடுமையாக திட்டினார் - முன்னாள் CSK வீரர் பேச்சு
30 ஆவணி 2025 சனி 08:47 | பார்வைகள் : 716
தோனி கிரிக்கெட் போட்டிகளின் அழுத்தமான சூழல்களில் கூட உணர்வுகளை வெளிக்காட்டாமல் கூலாக இருப்பார் என்பதால் அவரை ரசிகர்கள் மற்றும் வீரர்கள் கேப்டன் கூல் என அழைப்பது உண்டு.
ஆனால், தோனி தன்னை போட்டியின் இடையே கடுமையாக திட்டினார் என முன்னாள் CSK வீரர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பந்து வீச்சாளரான மோஹித் ஷர்மா, ஐபிஎல் தொடரில், 2013 முதல் 2015 ஐபிஎல் தொடர் வரை CSK அணிக்காக விளையாடினார்.
இதில், 2014 ஐபிஎல் தொடரில் 24 விக்கெட்கள் கைப்பற்றி, அதிக விக்கெட்களை வீழ்த்துபவருக்கான ஊதா நிற தொப்பியை வென்றார்.
இந்நிலையில் CLT தொடரில் தோனி தன்னை திட்டியது குறித்து மோஹித் சர்மா பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "தோனி உடன் எனக்கு நிறைய தருணங்கள் உள்ளது. அவர் மிகவும் அமைதியானவர். அவர் தன் அமைதியை இழப்பார் என நீங்கள் ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.
CLT தொடரில் KKR அணிக்கு எதிரான போட்டியில், தோனி ஈஸ்வர் பாண்டேவை பந்து வீச அழைத்தார். நான் என்னை தான் அழைத்தார் என நினைத்து பந்து வீச சென்று விட்டேன்.
நான் பந்து வீச தொடங்கியதால், நான்தான் வீச வேண்டும் என நடுவர் கூறி விட்டார். அப்போது தோனி தனது அமைதியை இழந்து என்னை திட்டினார்.
முதல் பந்திலேயே யூசுப் பாதனின் விக்கெட்டை கைப்பற்றினேன். அதற்கு என்னை பாராட்டுவார் என நினைத்தேன். அப்போதும் திட்டினார்.
அவருடன் மைதானத்திற்கு வெளியேவும் நிறைய தருணங்களை அனுபவித்துள்ளேன். அவருடன் நீங்கள் சிறுது நேரம் இருந்தால் நிறைய கற்றுகொள்ளலாம். கிரிக்கெட் ஒரு மனிதனை எப்படி கனிவாக மாற்றும் என கற்றுக்கொடுத்தார்." என தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan