லோகேஷ் கனகராஜ் நடிக்கும் புதிய படத்தில் இரண்டு கதாநாயகிகள்?
29 ஆவணி 2025 வெள்ளி 16:21 | பார்வைகள் : 3779
தமிழ் சினிமாவில் ‘கைதி’ படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். இதை தொடர்ந்து இவர் விஜய், கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கி ட்ரெண்டிங் இயக்குனராக மாறியுள்ளார்.
அடுத்தது இவர், கைதி 2, விக்ரம் 2 போன்ற படங்களை இயக்க உள்ளார். இதற்கிடையில் இவர், ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் வைத்து கேங்ஸ்டர் படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. மேலும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்த இவர் ‘பென்ஸ்’ போன்ற படங்களை தயாரிக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என பல தகவல்கள் ஏற்கனவே வெளியானது. அதன்படி இவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கப் போகிறார்கள் என லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்திருக்கிறது. அதன்படி ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்த மிர்னா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். மற்றொரு நடிகையாக சுதா என்பவரும் நடிக்க உள்ளார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan