ஒரே சார்ஜில் 1205 கி.மீ. பயணம் - Lucid EV புதிய உலக சாதனை
31 ஆடி 2025 வியாழன் 08:18 | பார்வைகள் : 1307
ஒரே சார்ஜில் 1205 கி.மீ. பயணித்து Lucid EV புதிய உலக சாதனை படைத்துள்ளது.
சவூதி அரேபியாவின் ஆதரவுடன் செயல்படும் அமெரிக்க இலகுரக வாகன உற்பத்தியாளரான லூசிட் மோட்டார்ஸ், EV துறையில் புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
Lucid Air Grand Touring மொடல், ஒரே சார்ஜில் 1,205 கி.மீ தூரம் பயணம் செய்து Guinness World Record-இல் இடம்பிடித்துள்ளது.
இந்த சாதனை பயணம், சுவிட்சர்லாந்தின் St. Moritz-இல் இருந்து ஜேர்மனியின் Munich வரை, சுமார் 749 மைல்கள், மலைப்பாதைகள், நடுஞ்சாலை மற்றும் இரண்டாம் நிலை சாலைகளில் நிகழ்ந்தது.
இந்த சாதனை, சொகுசு மற்றும் செயல்திறன் கொண்ட EV-களில் லூசிடின் முன்னணியை உறுதி செய்கிறது.
சாதனையின் பின்புலம்
WLTP Range: 960 கி.மீ
சராசரி மின்சார நுகர்வு: 13.5 kWh/100 கி.மீ
வேகம்: 270 கி.மீ/மணிக்கு
Ultra-Fast Charging: 16 நிமிடங்களில் 400 கி.மீ வரை சார்ஜ்
இச்சாதனையின் முக்கிய பொறுப்பாளராக லண்டன் வணிகத்துறை நபர் Ümit Sabanci உள்ளார். இதை ஒட்டி, லூசிட் நிறுவனம் தனது சவூதியின் Vision 2030-க்கு ஏற்ப, King Abdullah Economic City-யில் வாகன உற்பத்தி நிலையத்தையும் இயக்கி வருகிறது.
மேலும், Ceer (Foxconn கூட்டாளியாக), BYD (சீன EV பிராண்டு), EVIQ (EV சார்ஜிங் திட்டம்), NEOM (தானியங்கி வாகனங்கள்) ஆகியவை EV துறையில் சவூதியின் வளர்ச்சியை உருவாக்கும் மற்ற முக்கிய முயற்சிகளாக உள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan