41 வயதில் சூப்பர்மேனாக கேட்ச் - ஏபி டிவில்லியர்ஸின்
24 ஆடி 2025 வியாழன் 10:04 | பார்வைகள் : 1426
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பாய்ந்து சிக்ஸரை தடுத்து, துடுப்பாட்ட வீரரை வெளியேற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.
உலக லெஜெண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் குவித்தது. ஏபி டி வில்லியர்ஸ் (AB de Villiers) 30 பந்துகளில் 63 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய இந்திய அணி 18.5 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 111 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது போதைய வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைப்பட்டது.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி DLS முறைப்படி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் யூசுப் பதான் அடித்த ஷாட்டை, பவுண்டரி எல்லையில் இருந்த 41 வயது டி வில்லியர்ஸ் பாய்ந்த சென்று தடுத்தார்.
அவரது கேட்ச் முயற்சியில் சரேல் எர்வீ பங்குபெற்று யூசுப் பதானை வெளியேற்றினார். டி வில்லியர்ஸின் இந்த ஃபீல்டிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan