லண்டன் மான்செஸ்டர் பகுதியில் கோர விபத்து
24 ஆடி 2025 வியாழன் 05:02 | பார்வைகள் : 1509
லண்டன் மான்செஸ்டர் பகுதியில் பாலத்திற்கு கீழுள்ள வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரட்டைத் தட்டு பேருந்து ஒன்று பாலத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த பயங்கர விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. மான்செஸ்டர் பாலம் அருகே பயணித்த பேருந்து பாலத்தின் மேற்தளத்தில் விளிம்புடன் உரசிய வேளையில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் இரட்டைத் தட்டு பேருந்தின் மேல் தளம் முழுவதுமாக சிதறியதில், இரண்டாவது அடுக்கில் இருந்த பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
கிட்டத்தட்ட 20 பயணிகள் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலம் இருப்பது தெரிந்தும் பேருந்தை கவனக்குறைவாக இயக்கியதற்காக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan