Paristamil Navigation Paristamil advert login

அல்ஜீரியாவில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 18 பேர் பலி

அல்ஜீரியாவில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 18 பேர் பலி

17 ஆவணி 2025 ஞாயிறு 15:03 | பார்வைகள் : 5274


அல்ஜீரியாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில், 18 பயணிகள் உயிரிழந்தனர்.

அல்ஜீரியா தலைநகர் அல்ஜீயர்சில் முகமதியா மாவட்டத்தில் ஆற்றில் பயணிகள் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

அதிவேகமாக சென்ற பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது என்பது தெரியவந்தது.சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர்,மீட்பு பணி மேற்கொண்டனர்.

 

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மீட்பு படையினர் மீட்ட 9 பயணிகளில் இரண்டு பேர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்