கனடா PR விண்ணப்ப விதிமுறைகளில் புதிய மாற்றம்
14 ஆவணி 2025 வியாழன் 18:08 | பார்வைகள் : 1412
நிரந்தர வதிவிடத்திற்கு (PR) விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றத்தை கனடா அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 21 முதல் கனடா Express Entry வழியாக நிரந்தர வதிவிட உரிமத்தை (Permanent Residency) பெற விரும்பும் வெளிநாட்டவர்கள், தங்கள் Express Entry Profile-ஐ சமர்பித்தவுடன், Immigration Medical Exam (IME) முடித்திருப்பதற்கான சான்றுகளை முன்பே சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு முன் IRCC (Immigran, Refugees and Citizenship Canada) வழிகாட்டுதல் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
PR விண்ணப்பத்திற்கு Invitations to Apply (ITA) வந்தவுடன், விண்ணப்பதாரரும், தேவைப்பட்டால் அவரது குடும்ப உறுப்பினர்களும் மருத்துவ பரிசோதனை முடித்திருப்பதை நிரூபிக்கவேண்டும்.
இந்த பரிசோதனைகள் IRCC-யால் அங்கீகரிக்கப்பட்ட Panel Physicians மூலமாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், மருத்துவ பரிசோதனைக்காண அனைத்து செலவுகளும் விண்ணப்பதாரரால் செலுத்தப்பட வேண்டும்.
Spouse, Partner, Child Sponsership போன்ற non-Express Entry விண்ணப்பங்களை PR விண்ணப்பம் சமர்பித்த பிறகு IRCC வழிகாட்டுதல் வழங்கும்.
கடந்த 5 ஆண்டுகளில் IME முடித்திருந்தாள் அதன் Unique medical identifier number-ஐ புதிய விண்ணப்பத்தில் சேர்க்கலாம்.
இந்த புதிய மாற்றம் PR விண்ணப்ப செயமுறையை வேகமாகவும் மருத்துவ தரத்தை உறுதிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan