Seine-Saint-Denis : பேருந்து சாரதி மீது தாக்குதல்!
12 ஆவணி 2025 செவ்வாய் 20:19 | பார்வைகள் : 2662
RATP சாரதி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஓகஸ்ட் 12, இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
Dugny (Seine-Saint-Denis) நகரில் உள்ள Cité du Moulin நிறுதத்தில் காலை 6.15 மணி அளவில் பேருந்து நிறுத்தப்பட்டபோது, இருக்கையில் அமர்ந்திருந்த சாரதியை நெருங்கி வந்த பயணி ஒருவர் ஊசி ஒன்றினால் குத்தியுள்ளார். இதில் சாரதி காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இடம்பெறுவதற்கு சற்று முன்னர் அதே நபர் அதே சாரதியை மிரட்டி அவரிடம் இருந்து கைப்பையை பறிக்க முற்பட்டார். அந்த முயற்சி தோல்வியடையவே அவர் இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டதாக அறிய முடிகிறது.
தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறத், அதேவேளை RATP தரப்பில் கடும் கண்டனமும் வெளியிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan