Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கி சூடு - மூவர் காயம்

அமெரிக்காவின் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கி சூடு - மூவர் காயம்

11 ஆவணி 2025 திங்கள் 06:12 | பார்வைகள் : 640


அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் 10-08-2025 அதிகாலை 1.20 மணியளவில் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சம்பவம் குறித்து தகவலறிந்து டைம்ஸ் சதுக்கத்திற்கு விரைந்த பொலிஸார் , காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்