Aude காட்டுத் தீ கட்டுப்பாட்டில் - அதிகப்படியான எச்சரிக்கை தொடர்கிறது!!
9 ஆவணி 2025 சனி 13:10 | பார்வைகள் : 1376
Aude பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீக்கெதிரான போராட்டம், இன்று சனிக்கிழமை 9 ஓகஸ்ட் தொடர்கிறது. வியாழக்கிழமை இரவு முதல் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், இன்னமும் தீ முழுமையாக அணையவில்லை.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களின் பணி தற்போது தீ மீண்டும் பற்றிக்கொள்ளாதபடி கண்காணிப்புப் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை, தீ பரவலைத் தடுக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஐந்தாவது நாளைத் தாண்டித் தொடர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ, AUDE மாவட்டத்திலுள்ள massif des Corbières மலைப்பகுதிகளில் 17,000 ஹெக்டேர்களை அழித்துள்ளது. இந்நிலையில், செம்மஞ்சள் எச்சரிக்கை அளவிலான வெப்ப அலை, தீ மீண்டும் பரவுவதற்கான சூழலை உருவாக்கக் கூடிய ஆபத்து உள்ளது.
வியாழக்கிழமை இரவு முதல் தீ கட்டுப்பாட்டில் இருந்தாலும், தீயணைப்பு வீரர்கள் 90 கி.மீ. நீளமான காட்டின் விளிம்புகளைச் சீராக கண்காணிக்கின்றனர். தீ பரவலை அதிகரித்த சூடான மற்றும் உலர்ந்த tramontane காற்று மீண்டும் வீசும் அபாயத்தையிட்டு அஞ்சுகின்றனர்.
'இன்னமும் பல நாட்களிற்கு முன்னர் இந்தத் தீ முழுமையாக அணைந்ததாக அறிவிக்க முடியாது' என, யுயரனந மாவட்டஆணையர் எச்சரித்துள்ளார். 'இன்னும் நிறைய வேலை மீதமுள்ளது' என்றும் அவர் கூறினார்.
செவ்வாய்கிழமை அவசரமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய கடைசி குடியிருப்பாளர்கள், வெள்ளிக்கிழமை இரவு 15 கிராமங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இது, மத்தியதரைக் கடற்கரைப் பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்து ஆகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan