CO2 வாயுவை உணவாக மாற்றி சீன விஞ்ஞானிகள் சாதனை
7 ஆவணி 2025 வியாழன் 13:38 | பார்வைகள் : 3804
கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயுவை உணவாக மாற்றும் புதிய தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.
Tianjin Institute of Industrial Biotechnology நிறுவனம் உருவாக்கிய இந்த முறையில் மெத்தனாலைக் (Methanol) கொண்டு வெள்ளை சர்க்கரை (Sucrose) உருவாக்கப்பட்டுள்ளது.
Methanol என்பது தொழில்துறை கழிவுகள் அல்லது கார்பன் டை ஆக்சைடு வாயுவிலிருந்து பெறப்படும் குறைந்த கார்பன் முயல்கூறு ஆகும்.
CO2 மெத்தனாலைக் கொண்டு சர்க்கரை தரைக்கும் இந்த முறையில், in vitro Biotransformation (ivBT) எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் Enzymes மூலம் மெத்தனால் மாற்றப்பட்டு சுக்ரோஸ் மற்றும் ஸ்டார்ச் போன்ற உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த முறையின் மாற்று விகிதம் 86 சதவீதம் ஆகும். இது உயிர் உற்பத்தி துறையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்த ivBT தொழில்நுட்பத்தது மேலும் விரிவாக்கி, fructose, amylose, amylopectin, cellobiose மற்றும் cellooligosaccharides போன்ற பல்வேறு சேர்மங்களை உருவாக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.
2100 காலக்கட்டத்தில் உலக மக்கள்தொகை 10 பில்லியனாக உயரும் நிலையில், உணவின் தேவை இரட்டிப்பாகும், அப்போது அதிகப்படியாக வெளியாகியிருக்கும் CO2-வை உணவாக மாற்றும் தொழிலநுட்பம் உணவு பாதுகாப்பிற்கான முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan