மீண்டும் நகரபிதா மீது தாக்குதல்!!
7 ஆவணி 2025 வியாழன் 10:18 | பார்வைகள் : 2001
ஜில் துசோ (Gilles Dussault), இஸேர் (Isère)) மாநிலத்தின் Villeneuve-de-Marc எனும் நகரத்தின் நகரபிதா இந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி நபர் ஒருவர் தன்னைக் கொடூரமாக தாக்கியதைத் தொடர்ந்து, அவசர மருத்துவ பராமரிப்புடன் லியோனில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த வன்முறைத் தாக்குதல், நகரத்தில் உள்ள ஒரு வீதியில் அவர் தனது 28 வயதுடைய மகனுடன் நடக்கும்போது, மாலை 5 மணியளவில் நடந்துள்ளது. தாக்கியவர் ஒரு கடுமையான பொருளால் தாக்கியதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மகனும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவசர சேவையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கிய நபர் ஒரு வாகனத்தில் தப்பிச்சென்று, பின்னர் அந்த வாகனத்தை ஒரு சுவற்றில் மோதி விட்டு கால்நடையாகத் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இஸேர் மாவட்ட ஆணையம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இந்த வன்முறைத் தாக்குதல் குறித்து உறுதியாகன கண்டனத்தைக் கூறியுள்ளதுடன் குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு, 2.501 தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023இனுடன் ஒப்பிட்டால் 9 சதவீதம் குறைவாக இருக்கலாம். எனினும் வல்லுநர்கள் எச்சரிக்கும் வகையில், இத்தகைய தாக்குதல்கள் மிகவும் வன்முறையுடன் கூடியவையாக மாறிவருகின்றன. பெரும்பாலான தாக்குதல்கள் நகரபிதாக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan