5 ஆண்டாகியும் இழப்பீடு வரலை ஏர் இந்தியா மீது பயணி புகார்
7 ஆவணி 2025 வியாழன் 06:55 | பார்வைகள் : 1960
விமான டிக்கெட் ரத்தாகி ஐந்து ஆண்டுகளாகியும், அதற்குண்டான இழப்பீட்டை 'ஏர் - இந்தியா' நிறுவனம் திரும்ப வழங்கவில்லை' என, பயணி ஒருவர், சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
விமான நிறுவன இணையதளம் அல்லது முகவர்கள் வாயிலாக, பயணியர் 'டிக்கெட்' முன்பதிவு செய்து கொள்வர். இப்படி புக்கிங் செய்யும் டிக்கெட்களை, விமானங்களை இயக்குவதில் திடீர் சிக்கல், நிர்வாக காரணம் எனக்கூறி, நிறுவனங்கள் ரத்து செய்வது வழக்கம்.
இது போன்று ரத்து செய்யப்படும் டிக்கெட்டிற்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக விதிமுறைகள்படி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு, ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை அதிகபட்சமாக நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால், ஏர் இந்தியா நிறுவனம், விமான டிக்கெட் இழப்பீடு வழங்குவதில் சமீப நாட்களாக சொதப்பி வருகிறது. இதற்கிடையே சமூக வலைதளத்தில் பயணி ஒருவர், '2020ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட விமானத்திற்கு, இதுவரை ஏர் இந்தியா இழப்பீடு வழங்கவில்லை' என, புகார் அளித்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த 2020, மே 6ம் தேதியில், பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் இருந்து, கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்துக்கு ஏர் - இந்தியா விமானத்தில் பயணிக்க, டிக்கெட் முன்பதிவு செய்தேன். கொரோனா நோய் பரவல் அதிகமாக இருந்ததால், விமானம் ரத்து செய்யப்பட்டதாக, இந்நிறுவனம் அறிவித்தது.
இதற்கான இழப்பீடு விரைவில் வழங்கப்படும் என, எதிர்பார்த்து காத்திருந்தேன். சம்பந்தப்பட்ட அனைத்து ஆவனங்களையும் சமர்ப்பித்தும், ஐந்து ஆண்டுகளாக எந்த இழப்பீடும் வழங்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு ஏர் இந்தியா நிறுவனம், 'உங்களுடைய புகாரை கவனிக்கிறோம். கவலைப்பட வேண்டாம். சரிபார்த்து உங்களுக்கு தெரிவிக்கிறோம்' என, பதில் அளித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan