அணையாவிளக்கில் சிகரெட் பற்ற வைத்த நபர் கைது: வதிவிட உரிமை ரத்து!!
6 ஆவணி 2025 புதன் 16:12 | பார்வைகள் : 8869
பரிஸ் நகரில் உள்ள Arc de Triomphe நினைவுச் சின்னத்தின் கீழ் அமைந்துள்ள அறியப்படாத வீரர்களின் கல்லறையில் இருந்து சிகரெட் பற்றவைத்த 47 வயதுடைய மொரோக்கோ நாட்டு நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். சுற்றியிருந்த சில சுற்றுலாப் பயணிகள் அவரைப் பார்த்தும் எந்த எதிர்வினையும் காட்டவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ப்ரூனோ ரெத்தையோ (Bruno Retailleau) அவருடைய வதிவிட உரிமையை ரத்து செய்யும் நடவடிக்கையை அறிவித்துள்ளார். இந்த செயல் போரில் உயிரிழந்தவர்களின் நினைவுக்கு அவமதிப்பாக இருக்கிறது எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நபர் இவ்வாறான செயலைக் கோலாகலமாக செய்ததுடன், வீடியோவில் இதைப் பார்த்தவர்கள் அவர் மதுபானம் அருந்தியவராகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். போர்வீரர் நினைவுகளை இழிவுபடுத்தும் இந்த வகையான செயல்கள் தண்டனைக்கு உரியவையாகும் என அரசு சார்பில் போர்வீரர்களுக்கான அமைச்சர் Patricia Mirallès, உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அறியப்படாத வீரர்களின் நினைவகம், பிரான்ஸுக்காக உயிர் தியாகம் செய்தோருக்கு மரியாதை செலுத்தும் புனித இடமாகும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan