AIயின் அபாயத்தை மறைக்கிறார்கள்! அதன் காட்ஃபாதரே பகிரங்க எச்சரிக்கை
1 ஆவணி 2025 வெள்ளி 08:45 | பார்வைகள் : 992
DeepMind நிறுவன சி.இ.ஓவை குறிப்பிட்டு காட்ஃபாதர் ஆஃப் AI ஹிண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் பயன்பாட்டினால் பல துறைகளில் உள்ள பணியாட்கள் வெளியேற்றப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவின் காட்ஃபாதர் என்று கருதப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் (Jeffrey Hinton) AIயின் வேகமான வளர்ச்சி ஆபத்தானது என எச்சரித்துள்ளார்.
அவர் கூறுகையில், "பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் AI உடன் தொடர்புடைய மிகப்பெரிய அபாயங்களை நன்கு அறிந்திருந்தாலும், அவற்றை கதவுக்குப் பின்னால் மறைத்துவிட்டு வெளியில் மிகவும் குறைத்துக் காட்டி பேசுகிறார்கள்" என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர், DeepMind நிறுவனத்தின் சி.இ.ஓ டெமிஸ் ஹஸ்ஸாபிஸ் போன்றவர்களையும் குறிப்பிட்டு இந்த விடயம் குறித்து ஹிண்டன் பேசியுள்ளார்.
"டெமிஸ் போன்றவர்கள் ஆபத்துகளை உண்மையாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுகுறித்து ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்" என்றார் ஹிண்டன்.
கூகுளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த ஹிண்டன் 2023ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியதால் இந்த ஆபத்துகளைப் பற்றி இன்னும் வெளிப்படையாக பேச முடிகிறது என தெரிவித்தார்.
ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மிகவும் சக்தி வாய்ந்தது; அதைத் தவறான நபர்கள் பயன்படுத்தும்போது பேரழிவு ஏற்படும் எனவும் எச்சரித்தார்.
இதற்கிடையில், ஹிண்டனைப் போலவே AI ஆபத்து குறித்து பேசிவரும் டெமிஸ் ஹஸ்ஸாபிஸ் (Demis Hassabis), "AI நிறுவனங்கள் யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் வளர்கின்றன.
நான் வரவிருக்கும் ஆபத்துகளை முன்னரே கணித்திருக்க வேண்டும். எதிர்காலம் என்பது எங்கோ தூரத்தில் உள்ளது என்று நினைத்துவிட்டேன்" என வருத்தம் தெரிவித்தார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan