ரசிகர்கள் வைத்த செல்லப்பெயருக்கு TradeMark விண்ணப்பித்துள்ள தோனி
1 ஆடி 2025 செவ்வாய் 13:55 | பார்வைகள் : 3540
Captain Cool என்ற பெயருக்கு TradeMark பெற தோனி விண்ணப்பித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்த மஹேந்திர சிங் தோனி, வெற்றிகரமான அணித்தலைவர் என போற்றப்படுகிறார்.
கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே அணித்தலைவர் தோனி மட்டுமே.
தோனி போட்டியின் இக்கட்டான நேரங்களில் கூட, கோபம், ஆக்ரோஷம் போன்ற எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் இருப்பார். இதனால் ரசிகர்கள் தோனியை செல்லமாக கேப்டன் கூல்(Captain Cool) என அழைப்பார்கள்.
இந்நிலையில், Captain Cool என்ற வாசகத்தை TRADEMARKஆக பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார் தோனி. விளையாட்டு பயிற்சி, பயிற்சி சேவைகள் மற்றும் பயிற்சி மையங்களுக்கு ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக முத்திரைகள் பதிவேடு போர்ட்டலின் படி, விண்ணப்பம் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வர்த்தக முத்திரை ஜூன் 16, 2025 அன்று அதிகாரப்பூர்வ வர்த்தக முத்திரை இதழில் வெளியிடப்பட்டது.
இதன் மூலம், தோனியின் அனுமதி இல்லாமல் வேறு எந்த நிறுவனமும் வணிக நோக்கத்திற்காக இந்த வாசகத்தை பயன்படுத்த முடியாது.
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ, CR7 என்பதற்கும், உசைன் போல்ட் Lightning Bolt என்ற பெயருக்கும் இதே போல் Trademark பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகும் கூட, வர்த்தக முத்திரைகள் பணம் சம்பாதிக்க உதவும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan