நடுவர்கள் தவறு செய்தாலும் அபராதம்! சீறிய கேப்டன்

29 ஆனி 2025 ஞாயிறு 15:18 | பார்வைகள் : 670
களத்தில் நடுவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் ரஸ்டன் சேஸ் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் பார்படாஸில் நடந்தது.
இதில் அவுஸ்திரேலிய அணி 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஷாய் ஹோப் (Shai Hope) அடித்த பந்தை, அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கேட்சை செய்தார்.
ஆனால் பந்து தரையில் பட்டதாக சர்ச்சை கிளம்பியது. எனினும் ஷாய் ஹோப்பிற்கு அவுட் கொடுக்கப்பட, அவர் 48 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதுகுறித்து மேற்கிந்திய தீவுகளின் தலைவர் ரஸ்டன் சேஸ் (Roston Chase) கருத்து தெரிவித்தார்.
அவர், "வீரர்கள் தவறு செய்தால், விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுவதை போல, நடுவர்கள் தவறு செய்தாலும் அவர்களுக்கு அபாரம் விதிக்க வேண்டும்" என்றார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1