பரிசின் 5வது மாவட்ட மாநகராட்சி கட்டிடம் வரலாற்று சிறப்புமிக்க நினைவிடமாகப் பட்டியலிடப்படுமா?
27 ஆனி 2025 வெள்ளி 15:38 | பார்வைகள் : 4680
பரிசின் 5வது மாவட்ட மாநகராட்சிக கட்டடம் சில நாட்களுக்குள் வரலாற்று சிறப்புமிக்க நினைவிடப் பட்டியலில் (CLASSÉE MONUMENT HISTORIQUE) இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 1844-1865 இடையில் கட்டப்பட்டு, பாந்தியோனின் நேர் எதிர் இடத்தில் அமைந்துள்ள முக்கிய கட்டிடம்.
இந்த முயற்சிக்கு பல ஆண்டுகளாக போராடியதாக Horizons கட்சியின் 5வது மாவட்ட முதல்வர் புளோரோன்ஸ் பெர்தூ (Florence Berthout) தெரிவித்திருந்தார்.
இந்த பட்டியலிடல் மூலம், மாநகராட்சியின் எதிர்காலப் பராமரிப்பு பணிகளுக்காக மத்திய அரசிலிருந்து 40மூ வரை நிதி உதவி பெறும் வாய்ப்பு உருவாகும்.
இந்த தீர்மானம் ஜூலை 1 முதல் 4 வரை நடைபெறும் பாரிஸ் நகர சபை கூட்டத்தில், வாக்கெடுப்பிற்கு வரவிருக்கிறது. வாக்கெடுப்பில் தேவைப்படும் ஒப்புதல் கிடைத்தால், இது அதிகாரபூர்வமாக அமையலாம்.
முன்மாதிரி நகராட்சிகளுக்குப் பிறகு, இப்போது இந்த கட்டடமும் பாரிசின் வரலாற்று சின்னமாக உயர இருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan