Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணியை அச்சுறுத்தப் போகும் வீரர்! 4 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தில் களம்

இந்திய அணியை அச்சுறுத்தப் போகும் வீரர்! 4 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தில் களம்

26 ஆனி 2025 வியாழன் 17:19 | பார்வைகள் : 942


இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட உள்ளார்.

லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து, இரண்டு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சூலை 2ஆம் திகதி தொடங்க உள்ளது.


இந்தப் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) களமிறங்க உள்ளார்.

30 வயதாகும் ஆர்ச்சர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரை தேர்வுக்குழு சேர்த்துள்ளது.

13 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஆர்ச்சர் 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவரது வருகை இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்