பிரான்சை தாக்கும் சீரற்ற வானிலை! - ஒருவர் பலி!!
25 ஆனி 2025 புதன் 22:55 | பார்வைகள் : 2114
சீரற்ற வானிலை காரணமாக இன்று ஜூன் 25, புதன்கிழமை ஒருவர் பலியாகியுள்ளார்.
மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 59 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரான்சின் வடமேற்கு மாவட்டமான Mayenne இல் உள்ள சிறிய நகரமான Saint-Cyr-en-Pail இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாலை 7.30 மணி அளவில் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு குறித்த நபர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், அவரை காப்பாற்றமுடியாமல் போயுள்ளது.
இன்று அதிக வெப்பமும், பிற்பகலின் பின்னர் இடி மின்னல் தாக்குதல் மற்றும் ஆலங்கட்டியுடன் கூடிய மழை போன்ற அனர்த்தங்கள் காரணமாக 50 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, நாளை வியாழக்கிழமையும் இதேபோன்ற வானிலை தொடரும் என அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan