Navigo Liberté+ : மொபைலில் பதிவு செய்ய முயற்சிக்கும் பயணிகள் சிக்கல்களில்!

25 ஆனி 2025 புதன் 14:10 | பார்வைகள் : 1883
Île-de-France Mobilités நிறுவனம் வழங்கும் Liberté + பாஸ், கடந்த ஜூன் 23 முதல் ஸ்மார்ட்போன்களில் டிஜிட்டலாக கிடைக்க தொடங்கியுள்ளது. ஆனால், இந்த பாஸ் பெற முயற்சித்த பயணிகள் பலர் செயலியில் பிழை செய்திகளை சந்தித்துள்ளனர்.
புதிய பாஸ் சேர்க்க, வாலெட்டில் (wallet) ஏற்கனவே உள்ள Navigo அல்லது தனி டிக்கெட்டுகளை நீக்க வேண்டும். அதன் பிறகு, புதிய கணக்கை உருவாக்கி, Liberté + சந்தாவுக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த செயல்முறையை ஒரே கட்டமாகச் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
Liberté + பாஸ் ஏற்கனவே உள்ள பயணிகள், அதை நேரடியாக ஸ்மார்ட்போனுக்கு மாற்ற முடியாது; புதிய சந்தாவை பதிவு செய்ய வேண்டும், இது இலவசமாகும்.
குறைந்த கட்டணங்கள் (tarifs réduits) உடைய பயணிகள், தற்போது டிஜிட்டல் பதிப்பை பெற முடியாது. இது இயல்பான நிலை என்று Île-de-France Mobilités தெரிவித்துள்ளது, மேலும் இந்த வசதிகள் விரைவில் உருவாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1