டிஸ்னிலோந்தில் 9 வயது சிறுமியுடன் போலி திருமணம்!!
23 ஆனி 2025 திங்கள் 18:10 | பார்வைகள் : 2879
சனிக்கிழமை, டிஸ்னிலோந்த் பாரிஸ் ஒரு திருமணத்துக்காக தனியாராக மூடப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்வின்போது மணமகள் ஒரு 9 வயது சிறுமி என்பதும், திருமணம் உண்மையல்ல என்பது தெரியவந்தது. இது ஒரு திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த போலி திருமணத்துடன் தொடர்புடைய இரு சந்தேகப்படிகள், திங்கள் அன்று (ஜூன் 23) மோ நகர நீதிமன்றத்தில் (Meaux) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மணமகனாக நடித்தவர் ஒரு 22 வயது பிரிட்டன் நபர்
மணமகனாக நடித்த 22 வயது நபர், தொழில்முறை மேக்கப்பால் தனது முகத்தை மாற்றியுள்ளார்.
இவரது உண்மையான அடையாளம் உறுதியாகவில்லை, ஆனால் பிரித்தானிய குடிமகனாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது ஏமாற்றும் நோக்கத்தில் தனிநபர் மற்றும் நிறுவனத்துக்கு நஷ்டம் விளைவித்தமை, மற்றும் நம்பிக்கை மோசடி செய்தமை போன்ற என்ற குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.
24 வயதான லெட்வியாவைச் சேர்ந்த பெண், மணமகளின் சகோதரியாக நடித்துள்ளார். அவரும் குற்றவாளியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
9 வயது உக்ரைனிய சிறுமி நிகழ்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தான் பரிஸ் வந்துள்ளார். சிறுமிக்கு எந்தவிதமான உடல் அல்லது பாலியல் வன்முறையும் நடத்தப்படவில்லை என்றும், அவள் சுய சம்மதத்துடனே இதில் பங்குபற்றி உள்ளார் என்பதனையும் அரச வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.
இதனைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் 'உண்மையான திருமணம்' என்றே நினைத்தனர்.
ஆனால் இது உண்மையில், தனிப்பட்ட வகையில் படமாக்குவதற்காக நடத்தப்பட்ட ஒரு போலி விழா என தற்போது நீதிமன்ற அறிக்கை தெரிவித்துள்ளது.
மணநிகழ்வை நடத்த தனிநபர் ஒரு போலி அடையாள ஆவணங்களை கொண்டு டிஸ்னிலோந்த் பாரிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
தெற்காசிய மற்றும் லெட்விய நாட்டு நபர்கள், மற்றும் 100க்கும் மேற்பட்ட பிரெஞ்சு நடிகர்கள் திருமண விருந்தினர்களாக நடிக்க வைக்கப்பட்டனர்.
முக்கியமான இருவரும் நீதிமன்ற விசாரணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விசாரணை நீதிபதியிடம் (juge d’instruction) முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
அவர்களுக்கு கட்டுப்பாட்டு அடிப்படையிலான பிணை கோரப்படுவதாக மோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan