கூடுதல் விடுமுறைக்காக ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்த நபர்
22 ஆனி 2025 ஞாயிறு 18:07 | பார்வைகள் : 1803
விடுமுறைக்காக மனைவியை 4 முறை திருமணம் செய்த நபரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தைவானில் வங்கி ஊழியர் ஒருவருக்கு கடந்த ஏப்ரல் 6, 2020 அன்று முதல் திருமணம் நடைபெற்றுள்ளது.
தைவானில் தொழிலாளர் உரிமை சட்டப்படி, ஊழியருக்கு திருமணம் என்றால், ஊதியத்துடன் கூடிய 8 நாட்கள் விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம், வங்கி ஊழியர் 8 நாட்கள் விடுமுறை பெற்றுள்ளார். மேலும், கூடுதல் விடுமுறை பெற நினைத்த அவர், தனது மனைவியை விவாகரத்து செய்து மீண்டும் திருமணம் செய்துள்ளார்.
இதே போல், 3 முறை விவாகரத்து செய்து 4 முறை செய்துள்ளார். இதன் மூலம், 32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற்றுள்ளார்.
இந்த விவகாரத்தை கண்டறிந்த வங்கி நிர்வாகம், அவருக்கு மேலும் விடுப்பு வழங்க மறுத்துள்ளது. ஆனால் அதை எதிர்த்து அவர், நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊழியருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதோடு, தொழிலாளர் சட்டத்தை மீறியதாகக் கூறி வங்கிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து வங்கி மேல்முறையீடு செய்த போதிலும், ஊழியரின் விடுப்பு சட்டப்பூர்வமாக அனுமதிக்கத்தக்கவை என தீர்ப்பளித்துள்ளது.
இது போன்று எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க, தொழிலாளர் சட்டத்தில் திருத்தும் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan