குழந்தைகள் பெற்ற பின் திருமணம் - பென் ஸ்டோக்ஸின் மனைவி யார் தெரியுமா?
18 ஆடி 2025 வெள்ளி 13:01 | பார்வைகள் : 1277
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் மனைவி கிளாரே ராட்க்ளிஃப் குறித்த தகவல்களை இங்கு காண்போம்.
இங்கிலாந்து கிரிக்கெட்டின் முக்கிய வீரரான பென் ஸ்டோக்ஸ், தற்போதைய டெஸ்ட் அணியை வழி நடத்தி வருகிறார்.
களத்தில் ஆக்ரோஷமான செயல்படும் வீரரான ஸ்டோக்ஸின் திருமண வாழ்க்கை அவரது ஆட்டத்தைப் போலவே சுவாரசியமானது.
பென் ஸ்டோக்ஸின் காதல் அறிமுகம் 2010யில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் நடந்தது. ஸ்டோக்ஸிற்கு கிளாரே friend requestஐ அனுப்பியிருக்கிறார்.
அதனை ஸ்டோக்ஸ் Accept செய்ய இருவரின் காதல் வாழ்க்கையும் ஆரம்பமானது. இருவரும் பேசத் தொடங்கினர்.
அதன் விளைவாக பேஸ்புக்கில் ஸ்டோக்ஸின் 'Single' என்பது 'In a relationship' ஆக மாறியது. ஆரம்ப நாட்களில் இருவரும் நீண்ட தூர உறவில் இருந்தனர்.
டர்ஹாமில் ஸ்டோக்ஸ் இருந்தபோது, டவுன்டனில் கிளாரே PGCE படித்து வந்தார். 2012ஆம் ஆண்டில், இந்த காதல் ஜோடியின் உறவுக்கு சாட்சியாக 'Layton' என்ற மகனை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் பெண் குழந்தையை கிளாரே பெற்றெடுக்க, அவளுக்கு 'Libby' என்று பெயரிட்டனர்.
இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோரான பின் 2017ஆம் ஆண்டில் ஸ்டோக்ஸும், கிளாரேயும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் கிழக்கு பிரெண்டில் உள்ள செயிண்ட் மேரி தி விர்ஜின் தேவாலயத்தில் நடந்தது.
34 வயதாகும் கிளாரே ராட்க்ளிஃப் (Claire Ratcliffe) தனது PGCEஐ முடித்தபிறகு, சோமர்செட்டில் ஒரு முதன்மை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
ஸ்டோக்ஸின் மனைவியாக மட்டுமல்லாமல் கிளாரே அவரது வாழ்க்கையின் வலுவான தூணாகவும் இருந்துள்ளார்.
குறிப்பாக, 2017 பிரிஸ்டல் நைட் கிளப் சம்பவம் மற்றும் சட்ட நடவடிக்கை போன்ற ஸ்டோக்ஸின் கடினமான நேரங்களில், அவர் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க கிளாரே முக்கிய பங்கு வகித்தார்.
தன்னை "கிரிக்கெட் விதவை" என்று அழைத்துக் கொள்வதன் மூலம், ஒரு சர்வதேச வீரரின் மனைவியாக இருக்கும் பொறுப்புகளையும், பயணங்களையும் கிளாரே எவ்வளவு வசதியாக ஏற்றுக் கொள்கிறார் என்பதை அவரது நகைச்சுவையான பாணி பிரதிபலிக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan