Paristamil Navigation Paristamil advert login

மனித தோலால் ஆன டெடி பொம்மை - அமெரிக்காவில் அதிர்ச்சி

மனித தோலால் ஆன டெடி பொம்மை - அமெரிக்காவில் அதிர்ச்சி

17 ஆடி 2025 வியாழன் 05:59 | பார்வைகள் : 863


அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நடைபாதையில் மனித தோலால் ஆன சிதைந்த டெடி பியர் ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு பெட்ரோல் பங்கிற்கும் பேருந்து தரிப்பிடத்திற்கும் இடையிலான நடைபாதையில் குறித்த டெடி பியர் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் பார்வையில், மனித தோல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு ஒரு டெடி பியர் பொம்மையில் தைக்கப்பட்டது போல் தோன்றியது. 

அதன் கண்கள், உதடுகள், மூக்கு போன்றவையும் மனிதனின் கண்களை ஒத்திருந்தன.

பொலிஸாரின் விசாரணையில் இது மனித தோலால் ஆன டெடி பியர் பொம்மை அல்ல, மாறாக சாதாரண தோல் போன்ற ஒரு பொருளால் ஆனது என்பது தெரியவந்தது.

தடயவியல் குழுவும் அதில் எந்த மனித திசுக்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இது தென் கரோலினாவைச் சேர்ந்த ஒரு கலைஞரால் உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்