Paristamil Navigation Paristamil advert login

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம்

7 ஆடி 2025 திங்கள் 11:45 | பார்வைகள் : 1094


இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனங்களான Bajaj Auto, Ather Energy மற்றும் TVS Motor Company, சீனாவிலிருந்து வழங்கப்படும் Heavy Rare Earth (HRE) Magnet பற்றாக்குறையால் உற்பத்தியை குறைக்கும் நிலைக்கு வந்துள்ளன.

இந்த காந்தங்கள் எலக்ட்ரிக் மோட்டார்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

புனேவிலுள்ள பஜாஜ் ஆட்டோ, இந்த தட்டுப்பாடால் 50% உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. Ather 8-10% உற்பத்தி குறைப்பை மேற்கொள்ளும் நிலையில் உள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக சந்தையில் மேலோங்கி வரும் TVS நிறுவனமும் உற்பத்தியில் வெகுவாக மாற்றம் செய்யவுள்ளது.

இதேநேரம், ஓலா எலக்ட்ரிக் மீது இதன் தாக்கம் இருக்காது என நிறுவனமே தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது 5-6 மாதங்களுக்கு போதுமான அளவில் மெக்னெட் சேமிப்பில் வைத்துள்ளதாகவும், ஜூலையில் உற்பத்தியை அதிகரிக்க கூட முடியும் எனவும் கூறியுள்ளது.

இந்த நெருக்கடிக்கான மாற்றுவழிகள் குறித்து இந்திய அரசு சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

மேலும், இந்திய ஆட்டோ நிறுவனங்கள் வியட்நாம், ஜப்பான், இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்தும் வழங்குநர்களை தேடிக்கொண்டிருக்கின்றன.

இந்த உற்பத்தி குறைவு சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது சந்தை ஆய்வாளர்களின் கவலையாக இருக்கிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்