புதிய வரலாறு படைத்த 14 வயது சூர்யவன்ஷி...!
6 ஆடி 2025 ஞாயிறு 11:35 | பார்வைகள் : 2621
இங்கிலாந்து அணிக்கு எதிரான U19 ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சாதனை சதம் விளாசினார்.
வொர்செஸ்டரின் நியூ ரோடு மைதானத்தில் நடந்த U19 வீரர்களுக்கான ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணி 363 ஓட்டங்கள் குவிக்க, இங்கிலாந்து அணி 308 ஓட்டங்கள் எடுத்து 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) 78 பந்துகளில் 10 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 143 ஓட்டங்கள் விளாசினார். விஹான் மல்ஹோத்ரா 121 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 129 ஓட்டங்கள் குவித்தார்.
இதில் வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தார்.
ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் விளாசிய இளம் வீரர் என்ற வரலாறு படைத்தார்.
போட்டிக்கு பின்னர் பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "அடுத்தப் போட்டியில் 200 ஓட்டங்கள் குவிக்க முயற்சி செய்வேன். 50 ஓவர்களும் களத்தில் நிலைத்து நின்று விளையாட முயல்வேன்.
எவ்வளவு அதிக ஓட்டங்கள் குவிக்கிறேனோ, அணிக்கு அவ்வளவு சாதகம்" என தெரிவித்தார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan