நிபந்தனைகள் இன்றி உடன் விடுதலை - ஈரானிற்கு பிரான்ஸ் எச்சரிக்கை!
3 ஆடி 2025 வியாழன் 15:51 | பார்வைகள் : 1988
செசில் கோலெரும் (Cécile Kohler) ஜாக் பாரிஸும் (Jacques Paris) தொடர்பான விவகாரத்தில், பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன்-நொயல் பாரோ (Jean-Noël Barrot) அவர்கள், இருவரையும் 'உடனடி மற்றும் நிபந்தனை இல்லாத முறையில் விடுவிக்க வேண்டும்' என்று கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இரண்டு பிரெஞ்சுப் பிரஜைகளும், ஈரானில் மொசாத் (இஸ்ரேலின் இரகசிய சேவை) சார்பாக உளவாளிகளாக இருந்ததமை மற்றும் ஈரான் அரசைக் கவிழ்க்க சதி செய்ததமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக மூன்று ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் குற்றங்கள் எல்லாமே மரண தண்டனைக்குத் தகுதியானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
40 வயதான செசில் கோலர் ஒரு இலக்கிய ஆசிரியை. அவரும், 72 வயதான அவரது காதலரான ஜாக் பாரிஸும், 2022 மே 7ஆம் தேதி ஈரானில் சுற்றுலா பயணத்தின் இறுதி நாளில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பிரான்ஸ் கடுமையாகக் குற்றம் சாட்டி உள்ளது
அமைச்சர் பாரோ நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 'இது மிக மோசமான மனித உரிமை மீறல்' என்றும், 'இவர்கள் கௌரவமான பிரெஞ்சு பிரஜைகளாக இருந்தும், அரசியல் காரணங்களுக்காக ஈரானால் ஒட்டுமொத்தமாக மோசமான நிலையில் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்' என்றும் கூறியுள்ளார்.
பிரான்ஸ் அரசு மற்றும் இருவரின் குடும்பங்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், இவர்களின் விடுதலைக்காக பிரான்ஸ் பக்கபலமாக இருக்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan