ஏழு மாதங்களின் பின்னர் பிரதமரின் உத்தியோகபூர்வ புகைப்படம்!!
3 ஆடி 2025 வியாழன் 08:46 | பார்வைகள் : 2072
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ பதவியேற்று ஏழு மாதங்களின் பின்னர், அவரது அமைச்சர்களுடன் இணைந்து உத்தியோகபூர்வ புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
ஜூலை 2, நேற்று புதன்கிழமை காலை இந்த புகைப்படம் ஜனாதிபதியின் Élysée மாளியின் தோட்டத்தில் வைத்து எடுக்கப்பட்டது. பெரும்பான்மை இல்லாத அரசாங்கம் எப்போதுவேண்டுமானாலும் கவிழ்க்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பிரதாய புகைப்படம் எடுக்கும் நோக்கத்தை பெய்ரூ அறவே கைவிட்டிருந்தார்.
முன்னதாக, மூன்று மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்த மிஷல் பார்னியே அப்படி ஒரு புகைப்படத்தை பதிவே செய்யவில்லை. அதை அடுத்து, ஏழு மாதங்கள் கழித்து இந்த உத்தியோகபூர்வ புகைப்படத்தை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழாம் இணைந்து எடுத்துக்கொண்டனர்.
இறுதியாக பதிவு செய்யப்பட்ட அரசாங்க புகைப்படம், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அப்போதைய பிரதமராக இருந்த Elisabeth Borne, அமைச்சர்களுடன் எடுத்துக்குக்கொண்ட புகைப்படமே ஆகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan