நோர்து-டேம் தேவாலயத்துக்கு - ஐந்து மில்லியன் பார்வையாளர்கள் வருகை!!
5 ஆனி 2025 வியாழன் 18:58 | பார்வைகள் : 3929
தீ விபத்தில் சிக்கியிருந்த நோர்து-டேம் தேவாலயம் மீள திறக்கப்பட்டதன் பின்னர், இதுவரை ஐந்து மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அதனை பார்வையிட்டுள்ளனர்.
2024, டிசம்பர் 7 ஆம் திகதி நோர்து-டேம் தேவாலயம் மீள திறக்கப்பட்டிருந்தது. புதிய வடிவில் மாறியுள்ள தேவாலயத்தைக் காண அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். டிசம்பர் 7 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையான ஐந்தரை மாதங்களில் 5,109,500 பேர் வருகை தந்துள்ளனர்.
நாள் ஒன்றுக்கு சாராசரியாக 35,000 பேர் வருகை தந்துள்ளனர்.
இந்த 2025 ஆம் ஆண்டில் நோர்து-டேம் தேவாலயத்தை பார்வையிட 15 மில்லியன் மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan