"நாம் ஒன்றும் சும்மா இருந்து விடப்போவதில்லை": MaPrimeRénov இடைநிறுத்தம் குறித்து கட்டிடத்துறை எதிர்ப்பு!!

5 ஆனி 2025 வியாழன் 15:15 | பார்வைகள் : 3037
MaPrimeRénov’ எனும் அரசு உதவித் திட்டம் திடீரென இடை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கட்டிட புனரமைப்பு மற்றும் சக்தி சேமிப்பு துறை மிகுந்த அதிர்ச்சி மற்றும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த முடிவால் சிறு நிறுவனங்கள், மற்றும் தொழிலாளர்கள் வருங்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படுவர் என 19 தொழில்துறை கூட்டமைப்புகள் எச்சரித்துள்ளன. அவர்கள் பிரதமரை நேரடியாக சந்திக்க விரும்புகின்றனர் மற்றும் பொருளாதார அமைச்சக கூட்டம் இனி தேவையில்லை என தெரிவிக்கின்றனர்.
Fédération Française du Bâtiment (FFB) உள்ளிட்ட கட்டிடத்துறை சங்கங்கள், இந்த முடிவுக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் சாலை மறியல்கள் நடத்த திட்டமிட்டு வருகின்றன. FFB தலைவர் Olivier Salleron, இந்த முடிவால் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக கூறியுள்ளார்.
ஜூன் 13 நடைபெறும் தேசிய மாநாட்டில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Capeb என்ற சங்கமும் வலுவான எதிர்வினையை ஆற்றும் திட்டத்தில் உள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1