தேசிய வேலைநிறுத்தம் – வியாழக்கிழமை, ஜூன் 5 -என்ன எதிர்பார்க்கலாம்?
5 ஆனி 2025 வியாழன் 14:17 | பார்வைகள் : 3944
இன்று ஜூன் 5 வியாழக்கிழமை, ஓய்வூதியத் திட்ட திருத்தத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த தொழிலாளர் எழுச்சியின் நாளாக, நாட்டுமட்டத்தில் ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நடைபெறுகின்றது. CGT சார்பில், முழு பிரான்ஸிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற உள்ளன.
அதே நாளில், தேசிய சபையின் உறுப்பினர்கள் 64 வயது ஓய்வு திட்டத்தை ரத்து செய்யும் கம்யூனிஸ்ட் கட்சியின் யோசனையை பரிசீலிக்கவுள்ளனர்.
CGT வலியுறுத்தியபடி, வியாழக்கிழமை முழுவதும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. முழு பிரான்ஸில் 165 இடங்களில் பேரணிகள் நடைபறும். பாரிசில், போராட்ட அணிவகுப்பு மாலை 2 மணிக்கு Ecole militaire -இலிருந்து ஆரம்பமாகி, ஓய்வூதிய விவாதம் நடைபெறும் இடத்தை டக்கவுள்ளது.
பொது பள்ளிகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும். சில பள்ளிகள் உணவு வழங்கும் சேவையையோ அல்லது பாடத்திட்டத்திற்குப் பிறகு நடைபெறும் செயல்பாடுகளையோ நடத்தாது.
SNCF-இன் முதன்மை தொழிற்சங்கமான CGT Cheminot, இந்த ஜூன் 5, 2025 வியாழக்கிழமையிலும் வேலைநிறுத்தத்தைத் தொடருகிறது. TGV சேவைகளிலும் இடையீடுகள் ஏற்படலாம்.
பொதுப் போக்குவரத்து வேலைநிறுத்தங்களை தடை செய்யலாமா? என்ற விவாதம் எழுந்துள்ளது.
Transilien N மற்றும் U லேசான இடையூறுகளுக்கு உள்ளாகலாம். பயணிகள், Sncf இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் நேரம் மற்றும் வழித்தடங்களை பார்வையிட வேண்டும்.
RER B சாதாரணமாக இயங்கும் என RATP தெரிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan