கூகுளின் அற்புதமான AI தொழில்நுட்ப சாதனம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?
5 ஆனி 2025 வியாழன் 11:08 | பார்வைகள் : 10161
கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Veo 3 என்ற AI வீடியோ ஜெனரேட்டர் குறித்த தகவல்களை இங்கே காண்போம்.
கடந்த மே மாதம், 8 வினாடிகள் வரை 4k தரத்தில் வீடியோக்களை உருவாக்க முடியும் Veo 3 என்ற இந்த AI வீடியோ ஜெனரேட்டரை கூகுள் அறிமுகப்படுத்தியது.
அப்போது ஒலி, உரையாடல்கள் மற்றும் Sound Effects உட்பட சினிமா பாணியில் வீடியோக்களை உருவாக்க முடிந்ததாக பலர் தெரிவித்தனர்.
Veo மற்றும் Veo 2 மொடல்களை விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த Veo 3 என்ற AI ஜெனரேட்டர் வெளிவந்துள்ளது.
இதன் சிறப்பு என்னவென்றால் உரையாகவும், படங்களாகவும் கொடுக்கப்படும் உள்ளீடுகளுக்கு, நிஜமான உலகில் உள்ள இயற்பியலுடனும், சரியான உதட்டசைவுடனும் சத்தத்துடன் கூடிய வீடியோவை உருவாக்கி கொடுக்கப்படும்.
கூகுள் DeepMindயின் புதிய முயற்சிதான் இந்த Veo 3. இதன்மூலம் நிஜமாகத் தெரியும் காட்சிகள் முதல் அனிமேஷன், கற்பனை போன்ற அனைத்தையும் இந்த Veo 3 மூலம் உருவாக்க முடியும்.
குறிப்பாக, இந்த AI மொடலில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் நிஜ வீடியோக்களைப் போலவே இருப்பதாகவும், இதனால் வித்தியாசம் கண்டறியவே திணறுவதாகவும் பலரும் கூறுகின்றனர்.
கடந்த ஆண்டு அறிமுகமான Veo 2 ஆனது 4k தரத்தில் வீடியோக்களை உருவாக்கி OpenAIக்கு சொந்தமான Sora Turbo, Meta MovieGen மற்றும் Kling v1.5 மொடல்களுக்கு பாரிய போட்டியை கொடுத்தது.
ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள Veo 3 ஆனது ஆடியோ இணைத்து ஒரு புதிய உயரத்திற்கு சென்றுள்ளது என்று கூறும் அளவிற்கு உள்ளது.
இந்த Veo 3-ஐ பயன்படுத்த மாதம் 250 அமெரிக்க டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.21,472) செலவாகும் என்று கூறப்படுகிறது.
அத்துடன் இந்த Update இன்னும் இந்தியாவிற்கு கிடைக்கவில்லை. தற்போது அமெரிக்காவில் கூகுள் ஜெமினி செயலியில் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே Veo 3 கிடைப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்தி யூடியூப் ஷார்ட்ஸ் (Youtube Shorts) வீடியோக்களை உருவாக்கலாம். மேலும் இதில் கூகுள் DeepMind-யின் SynthID டிஜிட்டல் Watermark கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று அடையாளப்படுத்தி, Deepfake மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க உதவுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan