அகதிகள் படகை தடுத்து நிறுத்த தயாராகிறது பிரான்ஸ்!
4 ஆனி 2025 புதன் 15:08 | பார்வைகள் : 4556
பிரான்சில் இருந்து பிரித்தானியா செல்லும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ்-பிரித்தானியா ஒப்பந்தம் ஒன்றை போபோடப்பட்டதன் பின்னர் அகதிகள் பயணம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் தற்போது புதிய திட்டங்களை வகுத்து அகதிகளை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரெஞ்சு உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கிடைத்த தகவல்களின் படி, பிரெஞ்சு கடற்கரைகளில் ஒவ்வொரு 300 மீற்றர் இடைவெளிக்கும் கண்காணிப்பு பகுதிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரும் ஜூலை 8 ஆம் திகதி பிரெஞ்சு-பிரித்தானிய ஒப்பந்த மாநாடு லண்டனில் இடம்பெற உள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் கலந்துகொள்கிறார்.
46 மீற்றர் நீளம் கொண்ட Rozel வகை படகில் 20 காவல்துறை மற்றும் ஜொந்தாமினர் கொண்ட குழு கடலில் வலம் வரும். அகதிகள் படகு பிரான்சில் இருந்து புறப்படும் முன்னரே அவை தடுத்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த அகதிகள் பயணத்தை தடுத்து நிறுத்த ’மூன்று வருடங்கள் செல்லுபடியாகும் பிரான்ஸ்-பிரித்தானியா ஒப்பந்தம் ஒன்று இருவருடங்களுக்கு முன்னர் 500 மில்லியன் யூரோக்கள்பெறுமதியில் போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் இடம்பெற்ற பயணங்களில் 40% சதவீதத்தை பிரெஞ்சு காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan