சில்லறை வியாபாரிகள் Shein, Temu மற்றும் AliExpress தளங்களை அகற்ற கோரிக்கை!!
3 ஆனி 2025 செவ்வாய் 17:06 | பார்வைகள் : 5523
சில்லறை வணிகர்கள் Temu, Shein மற்றும் AliExpress ஆகிய மூன்று ஆசிய E-commerces தளங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அரசை வலியுறுத்துகின்றனர்.
இவர்களின் குற்றச்சாட்டின்ப்படி, இந்த தளங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் 85% முதல் 95% வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை மீறுகின்றன.
பிரான்ஸ் வர்த்தகக் குழு (CDCF) மற்றும் வர்த்தக பேரமைப்பு (CCF) உள்ளிட்ட 230 வணிகங்கள் மற்றும் 14 கூட்டமைப்புகள் இந்த நடவடிக்கையை ஆதரிக்கின்றன. அவர்கள், நுகர்வோர் மோசடி தடுப்பு துறையிடம் (DGCCRF) இந்த தளங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நேற்று கோரியுள்ளனர்.
இந்த நிலையில், பிரான்ஸ் செனட், இந்த நிறுவனங்களுக்கு விளம்பரத் தடை, அபராதங்கள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டாயம் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கிய சட்டத்தை விவாதித்து வருகிறது. வணிக அமைப்புகளுக்கான பிரான்ஸ் சட்டம் ஏற்கனவே இந்த தளங்களை தடை செய்ய அதிகாரம் அளிக்கிறது எனக் கூறுகின்றன.
இதற்கு பதிலளித்த Shein நிறுவனம், தனது பொருட்களின் பாதுகாப்புக்கும் தரத்திற்கும் 13 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்திருப்பதாகக் கூறியுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan