கனடாவில் காட்டுத்தீ.. பிரெஞ்சு வானத்தில் தென்பட்ட புகை!!
3 ஆனி 2025 செவ்வாய் 11:23 | பார்வைகள் : 4491
பிரான்சின் வடமேற்கு எல்லையில், வானத்தில் சிறிய மஞ்சள் நிற புகை மண்டலம் ஒன்று தென்பட்டது. அந்த புகை 4,000 கி.மீ தொலைவில் உள்ள கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் புகை என ஆச்சரியமான தகவல் சொல்லப்படுகிறது.
கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு கிட்டத்தட்ட 200,000 ஹெக்டேயர்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை Météo Bretagne வானிலை மையம் ஒரு தகவலை தனது X தள கணக்கில் வெளியிட்டது. அதில் Ille-et-Vilaine மாவட்டத்தின் Cornillé எனும் நகர்ப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றாகும். சூரிய அஸ்தமனத்தின் போது வானத்தில் மெல்லிய படை போன்ற மஞ்சள் நிற புகை பரவியிருந்தது எனவும், அது கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.
கனடாவில் ஏற்பட்ட புகை பிரான்சில் தென்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகையினை காற்று இழுத்து வந்ததாகவும், மிகவும் உயரத்தில் அவை தென்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அட்லாண்டிக் கடலின் மீதும், வட அமெரிக்கா பிராந்தியங்கள் மீதும் இந்த கனடா புகை ஆக்கிரமித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan