Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் இடி மின்னல்.. ஆலங்கட்டி மழை எச்சரிக்கை..!!

மீண்டும் இடி மின்னல்.. ஆலங்கட்டி மழை எச்சரிக்கை..!!

3 ஆனி 2025 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 10291


இன்று ஜூன் 3, செவ்வாய்க்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்களும், ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

கிழக்கு, தென் மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் சிலவற்றுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Ain, Jura, Loire, Rhône மற்றும் Saône-et-Loire ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் அதிகூடிய எச்சரிக்கையாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 36 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Allier, Ardèche, Ariège, Aveyron, Cantal, Corrèze, Côte-d'Or, Creuse, Dordogne, Doubs, Drôme, Haute-Garonne, Gers, Gironde, Isère, Landes, Haute-Loire, Lot, Lot-et-Garonne, Haute-Marne, Meurthe-et-Moselle, Moselle, Nièvre, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Bas-Rhin, Haut-Rhin, Haute-Saône, Savoie, Haute-Savoie, Tarn, Tarn-et-Garonne, Haute-Vienne, Vosges மற்றும்  Territoire de Belfort ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.