கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் துருவ ஒளி பார்வையிடும் அபூர்வ வாய்ப்பு
3 ஆனி 2025 செவ்வாய் 07:25 | பார்வைகள் : 4834
கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் துருவ ஒளி (northern lights)எனப்படும் வடதிசை ஒளிகளை நேரடியாக பார்வையிடும் அபூர்வ வாய்ப்பு உள்ளது அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வானிலை நிர்வாகம் (NOAA) இது தொடர்பில் முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிடிஷ் கொலம்பியா, அல்பெர்டா, சாஸ்காசுவான், மனிடோபா, யுகோன் மற்றும் நார்த்வெஸ்ட் டெரிடோரிஸ் மாகாணங்கள் முழுவதும் இந்த ஒளிக்காட்சியை நேரில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா, வென்கூவர், கால்கரி, எட்மண்டன், ரெஜைனா, சாஸ்காடூன், வின்னிபெக், யெல்லோநைஃப் மற்றும் வைட்ஹார்ஸ் ஆகிய நகரங்களும் இதில் உள்ளடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓன்டாரியோ, கியூபெக் மற்றும் அட்லாண்டிக் கனடாவின் பெரும் பகுதிகளிலும் வானத்தின் வடக்குப் பகுதியில் இந்த ஒளிக்காட்சியை காணக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி (EDT நேரம்) வரை இது உச்சக்கட்டத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NOAA வெளியிட்ட “view line” வரைபடத்தில், நியூஃபவுண்லாந்து, நோவா ஸ்கோஷியா மற்றும் தெற்கு ஓன்டாரியோவின் சில பகுதிகள் தவிர, அனைத்து மாகாணங்களும் இந்த ஒளிக்காட்சிக்கு உள்ளடங்குகின்றன.
இந்தக் கோட்டிற்கு அருகில் இருப்பவர்களும் தெளிந்த, மாசற்ற வானம் மற்றும் வடக்கு திசையின் தடையில்லா பார்வையுடன் இருந்தால் இதைப் பார்க்கலாம்.
நகரங்களின் மின்விளக்குகள் இந்த ஒளிக்காட்சிக்கு இடையூறு தரக்கூடியதாக இருப்பதால், நகர வெளிப் பகுதிகளுக்குச் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அபூர்வ நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவும் காணப்படும் எனினும், இன்றைய தினம் அளவிற்கு தெளிவாக இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan