பிரான்சில் வாகன விற்பனை வீழ்ச்சி!!
2 ஆனி 2025 திங்கள் 11:53 | பார்வைகள் : 4028
2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரான்சில் 123,918 புதிய வாகனங்களின் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 2024 ஆம் ஆண்டு மே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 12% சதவீத வீழ்ச்சியாகும்.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் இதுவரையான மாதங்களில் புதிய வாகனங்களின் விற்பனை 8% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. பிரெஞ்சு மக்களிடையே புதிய வாகனங்களுக்கான மோகம் குறைவடைந்துள்ளதா அல்லது, விலைவாசி காரணமாக இந்த வீழ்ச்சியா..??
1990 ஆம் ஆண்டில் பிரெஞ்சு மக்களில் 8% சதவீதமானவர்கள் புதிய வாகனங்களை கொள்வனவு செய்துள்ளார்கள். 2025 ஆம்ன் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 2% சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் 2.2 மில்லியன் வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. 2024 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட மொத்த வாகனங்களின் விற்பனையே 1.6 மில்லியன் தான். இந்த ஆறு வருடங்களில் 27% சதவீத வீழ்ச்சியாகும்.
விலை உயர்வு மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரியாக ஒரு வாகனம் €6,800 யூரோக்களால் அதிகரித்துள்ளது. அதுவே 2000 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் விலை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது.
மகிழுந்துகளின் தொழில்நுட்பங்கள் அதிகரித்துச் செல்ல, உற்பத்திச் செலவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது எனவும், 2035 ஆம் ஆண்டு அளவில் மிக மோசமான ஒரு நிலமைக்கு கொண்டுசெல்லும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan