ஜூன் 1ம் திகதி முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது
2 ஆனி 2025 திங்கள் 11:37 | பார்வைகள் : 4815
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மெசஞ்சர், ஜூன் 1, 2025 முதல் சில பழைய ஸ்மார்ட்போன்களில் இயங்காது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்தச் செய்திப் பரிமாற்ற செயலியின் செயல்பாட்டை மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மெட்டா நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்.
குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள வாட்ஸ்அப் இன்றியமையாத கருவியாக மாறியுள்ளது. பள்ளிக்கூடங்கள் முதல் அலுவலகங்கள் வரை, தனிப்பட்ட மற்றும் குழுத் தொடர்புகளுக்கு இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, மெட்டா நிறுவனம் அவ்வப்போது அதன் மென்பொருள் சார்ந்த குறைந்தபட்ச தேவைகளை மேம்படுத்துகிறது.
இது பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறையாகும். இதன் மூலம், புதிய அம்சங்களுடன் இணக்கத்தன்மையை உறுதி செய்யவும், சாத்தியமான பாதிப்புகளை சரி செய்யவும் முடியும்.
இந்த வழக்கமான மேம்படுத்தலின் ஒரு பகுதியாக, ஆப்பிள் iOS 15 அல்லது அதற்கும் முந்தைய பதிப்புகளிலும், ஆண்ட்ராய்டு 5.0 (லாலிபாப்) அல்லது அதற்கும் முந்தைய பதிப்புகளிலும் இயங்கும் சாதனங்களில் வாட்ஸ்அப் நாளை முதல் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1, 2025 முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காத ஸ்மார்ட்போன்களின் விரிவான பட்டியல் இங்கே:
ஆப்பிள் ஐபோன்கள்
ஐபோன் 5s, ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6s, ஐபோன் 6s பிளஸ், ஐபோன் எஸ்இ
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் கேலக்ஸி எஸ்4, சாம்சங் கேலக்ஸி நோட் 3, சோனி எக்ஸ்பீரியா இசட்1, எல்ஜி ஜி2, ஹவாய் அசென்ட் பி6, மோட்டோ ஜி (முதல் தலைமுறை) மோட்டோரோலா ரேஸர் எச்டி, மோட்டோ இ 2014
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan