5 முறை உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்…!
2 ஆனி 2025 திங்கள் 11:37 | பார்வைகள் : 4908
நோர்வே செஸ் தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் குகேஷ் வீழ்த்தினார்.
Stavanger நகரில் நோர்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் குகேஷ் (Gukesh), ஐந்து முறை உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை (Magnus Carlsen) எதிர்கொண்டார். இப்போட்டியின் ஆறாவது சுற்று ஆட்டத்தில் இருவரும் மோதினர்.
திருப்பங்கள் நிறைந்த இந்த ஆட்டத்தில், பெரும்பாலான நடுப்பகுதியை கார்ல்சன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
ஆனால், இறுதி ஆட்டத்தின்போது நேர அழுத்தத்தின் கீழ் ஏற்பட்ட ஒரு விலையுயர்ந்த தவறால் அவர் சறுக்கலை சந்தித்தார்.
இதனால் துல்லியமாக செயல்பட்டு இந்தியர் குகேஷ் அபார வெற்றி பெற்றார். முதல் சுற்றில் அடைந்த தோல்விக்கு இதன்மூலம் பழிதீர்த்துக்கொண்டார்.
மேலும், தற்போது 8.5 புள்ளிகள் பெற்று குகேஷ் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஃபேபியானோ காரோவானாவை விட கார்ல்சன் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார்.
இந்த நிலையில் தோல்வியடைந்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் கார்ல்சன் மேசையை குத்தினார்.
பின்னர் குகேஷிற்கு கைகொடுத்து விட்டு விரக்தியுடன் சென்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan