44 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமிக்கு மர்ம சமிக்ஞை…. குழப்பத்தில் விஞ்ஞானிகள்
2 ஆனி 2025 திங்கள் 11:37 | பார்வைகள் : 3687
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் விண்வெளியில் இருந்து 44 நிமிடங்களுக்கு ஒருமுறை வித்தியாசமான சமிக்ஞைகள் பூமிக்கு வருவதை கண்டுபிடித்துள்ளனர்.
விண்வெளியில் இருந்து எக்ஸ்ரே மற்றும் ரேடியோ கதிர்கள் வெளியாவது இயல்பான ஒன்றாக உள்ளது. அவ்வப்போது தொலைதூர நட்சத்திரங்களில் இருந்து இதுபோன்ற கதிர்கள் வெளியாகும்.
ஆனால், 1-2 விநாடிகள் மட்டுமே அவை பெறப்படும். அடுத்த சமிக்ஞை எப்போது வரும் என்பதை நம்மால் உறுதியாக கூற முடியாது.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் Australian Square Kilometre Array Pathfinder மற்றும் நாசாவின் சக்திவாய்ந்த சந்திரா எக்ஸ்ரே தொலைநோக்கியை பயன்படுத்தி மர்ம சமிக்ஞையை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சமிக்ஞையானது 44 நிமிடங்களுக்கு ஒருமுறை வருவதையும், சுமார் 2 நிமிடங்கள் வரை நீடிப்பதையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனை முன்கூட்டியே கணிக்க முடியும் என்றும், எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதையும் கூற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக ஏலியன்கள் இதனை அனுப்புகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், நிச்சயமாக இந்த சமிக்ஞை நிச்சயமாக நட்சத்திரங்கள் கிடையாது.
இதுவரை புரிந்துகொள்ளாத ஒரு விடயத்தை போல் இது இருப்பதும்தான். எனவே இதற்கு தீர்வு காண விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். சில கருத்துக்களையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
உதாரணமாக, இறந்துபோன நட்சத்திரத்தில் இருந்து காந்த எச்சம் வெளியேறும். அதுவாகக் கூட இது இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால், இப்போது வரை இதற்கான உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை.
நீண்ட ஆயுளைக் கொண்ட ஏதோ ஒன்று விண்வெளியில் இருக்கிறது. அதுதான் தொடர்ந்து, சிக்னலை அனுப்பிக்கொண்டே இருக்கிறது.
பூமிக்கு சிக்னல் அனுப்புகிறது என்பதைவிட, அதன் சிக்னல் கடந்து செல்லும் பாதையில் நாம் இருக்கிறோம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
அப்படியானால் அது என்ன என்பதற்கான விடை இதுவரை தெரியாமல் இருந்தாலும், அது என்னவென கண்டுபிடிக்கப்பட்டே தீரும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan